மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள்

https://tamilnewsdesk.blogspot.com/

 


மாப்பிள்ளை சம்பா அரிசி தமிழ்நாட்டில் மட்டுமே கிடைக்கும் ஒரு பாரம்பரிய சிவப்பு அரிசி வகையாகும், இந்த நெல் ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை பயிரிடப்படுகிறதுஇதை சம்பா பருவம் என்று குறிப்பிடப்படுகிறது. சத்துக்கள் நிறைந்த இந்த தானியம் சுகாதார நலன்களை வழங்குவதோடு  மண்ணின் வளத்தை அதிகரிப்பது மற்றும் தண்ணீரைத் தக்கவைக்கும் திறன் போன்ற சுற்றுச்சூழல் நன்மைகளையும் வழங்குகிறது இது அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது. மாப்பிள்ளை சம்பா அரிசி அனைவரும் உட்கொள்ள ஏற்றது. இந்த அரிசிக்கு ஏன் மாப்பிள்ளை சம்பா அரிசி பெயர் வந்தது தெரியுமா!

மாப்பிள்ளை சம்பா

முற்காலத்தில் திருமணத்திற்க்கு பெண் குடுப்பதற்க்கு முன்பு மாப்பிள்ளை தன் வீரத்தையும் வீரியத்தையும் நிரூபிக்க "இளவட்டகல்" என்னும் கனமான பாறையை தூக்க சொல்வது வழக்கம், அப்படி அந்த இளைஞர் இளவட்ட கல்லை தூக்கி விட்டால் அவை பலசாலியாகவும் வீரம் நிறைந்தவராக கருதி தங்கள் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பார்கள், மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிடுபவர்கள் இளவட்ட கல்லை எளிதாக தூக்கி விடுவார்கள் என்பதால் இந்த அரிசியை மாப்பிள்ளை சம்பா அரிசி என்னும் அழைக்கும் சொல் வழக்கம் உள்ளது.

சத்துக்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இரும்புசத்து, பாஸ்பரஸ், துத்தநாகம் (ஜிங்க்), மெக்னீசியம், வைட்டமின் பி 1  மற்றும் நன்மைகள் தரக்கூடிய நார்சத்து மற்றும் உப்புசத்து உள்ளது . இத்தனை சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் மற்றும் நன்மைகளைப் பார்ப்போம்...

ரத்தசோகை

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள இரும்புசத்து மற்றும் துத்தநாகம் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் மாப்பிள்ளை சம்பா அரிசி உணவுகள் சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

சர்க்கரை நோய்

மாப்பிள்ளை சம்பா அரிசி வெள்ளை அரிசியை விட குறைந்த கார்போஹைடிரேட் மற்றும் குறைந்த கிளைசேமிக் (Low glycemic index) கொண்டதால் இது ரத்தத்தில்  சர்க்கரை அளவை உடனே அதிகரிக்காதுஇதனால்  இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதுஇதில் உள்ள நார்சத்து சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

ALSO READ - கம்பு மருத்துவ   பயன்கள் 

கொலஸ்ட்ராலை குறைக்கிறது

மாப்பிள்ளை சம்பா அரிசியை தொடர்ந்து உட்கொள்வது கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும்இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும்  இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்

இந்த அரிசியை "எனர்ஜி ரைஸ்" என்கிறார்கள். மாப்பிள்ளை சம்பா அரிசியில் வைட்டமின் பி 6 மற்றும் மெக்னீசியம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்குகிறதுதசைகள் மற்றும் நரம்புகளை பலப்படுத்துகிறது.

ஆண்மை குறைபாடு

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த உணவுகளை தொடர்ந்து ஒரு மாதம்  சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருகும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியை ஊறவைத்து தயாரிக்கப்படும் நீராகாரத்தை காலையில் ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பலப்படும்,  நரம்பு தளர்ச்சி மற்றும் மலட்டுதன்மை நீங்கும். 

நோய்  எதிர்ப்பு சக்தி

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள்  மற்றும் அரிசியில் உள்ள துத்தநாகம் (Zinc) உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்க்கும்காயங்கள் வேகமாக ஆறுவதற்க்கும்  உதவுகிறது.

வாய்ப்புண்

மாப்பிள்ளை சம்பா பாரம்பரிய சிவப்பு அரிசியில் உள்ள வைட்டமின் பி 1  வயிறு மற்றும் வாய் புண்களை(அல்சர்) குணப்படுத்த உதவுகிறது.

வாய் புண் உள்ளவர்கள் மாப்பிள்ள சம்பா அரிசி நீராகாரத்தை  குடித்து வந்தால் , வாய் மற்றும் வயிற்றுப் புண்கள் விரைவாக குணமாகும்.

நார்ச்சத்து நிறைந்தது

மாப்பிள்ளை சம்பா அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும் என்பதால் இது அனைத்து வயதினருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசியை  அடிக்கடி  பயன்படுத்துவது சிறந்த பலன் தரும்இந்த அரிசியில் சாதம் மற்றும் இட்லிதோசை என்று பல உணவு வகைகளை தயார் செய்யலாம்இட்லி அல்லது தோசை தயாரிக்க இட்லி அரிசி இரண்டு பங்கு மற்றும் ஒரு பங்கு மாப்பிள்ளை சம்பா அரிசி சேர்த்து இட்லி , தோசை செய்யலாம். மேலும் கஞ்சியாக மிளகு மற்றும் சீரக தூள் சிறிதளவு சேர்த்து குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.