சிறுநீரக கற்களை கரைக்கும், எடையை குறைக்கும், வாழைத்தண்டின் பயன்கள்!

https://tamilnewsdesk.blogspot.com/

 

சிறுநீரக கற்களை கரைக்கும், எடையை  குறைக்கும், வாழைத்தண்டின் பயன்கள்!


வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் உடல்நலத்திற்கு நன்மை தரக்கூடிய பண்புகளை கொண்டுள்ளது, அதில் ஒரு பகுதி வாழைத்தண்டு ஆகும். வாழைமரத்தின் உள்பகுதியில்  காணப்படும் வென்மையான வாழைத்தண்டு மருத்துவ குணங்கள் கொண்டது, சிறுநீரக கற்களை வெளியேற்ற வாழைத்தண்டு ஜூஸ் பயன்படுத்தப்படுகிறது. வாழைத்தண்டின் பயன்கள் சிறுநீரக கற்களுக்கு மட்டுமில்லாமல் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. வாழைத்தண்டை  கூட்டு , பொரியல் செய்து உணவில் சேர்த்து சாப்பிடுவது பயன் தரும் . காய்கறி சந்தைகளில் எளிதாக கிடைக்க கூடிய வாழைத்தண்டின்  நன்மைகள் பற்றி பார்ப்போம்.  

நச்சுகளை நீக்கும்

வாழைத்தண்டில் நார்சத்து அதிகம் உள்ளது, இவை செரிமானத்தை சீராக்குகிறது டையூரிட்டிக் (Diuretic) பண்புகளை கொண்டுள்ள வாழைத்தண்டு ஜூஸ் உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி உடல் ஆரோக்கியத்தை  மேம்படுத்தும் .

சிறுநீரக கற்கள் கரைய

வாழைத்தண்டு சாறு சிறுநீரக கற்களை கரைக்கும் , வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கும் . டையூரிட்டிக் (Diuretic) பண்புகளை கொண்ட வாழைத்தண்டு ஜூஸ் சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் சிறுநீரக கற்களை வெளியேற்றும். .

வாழைத்தண்டு சாறு தயாரிக்க ஒரு வாழைத்தண்டை நறுக்கி அதில் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும், அதில் சிறிது மோர் மற்றும் உப்பு சேர்த்து உடனே குடிக்கவும் , வாழைத்தண்டு ஜூஸ் சுவையில் சிறிது துவர்ப்பாகவும் , கசப்பாகவும்  இருக்கும்.

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் காலையில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் சிறுநீர் வழியாக வெளியேறும் .

குறிப்பு : சிறுநீர் கற்கள் உள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் .

உடல் எடை குறைய

வாழைத்தண்டு உடல் எடையை குறைக்க உதவும். வாழைத்தண்டை உணவில் சேர்த்து சாப்பிடும் பொது அதில் உள்ள நார்சத்து காரணமாக வயிறு விரைவாக  நிறைந்து விடும், அதிகம் சாப்பிடும் போக்கை குறைக்கும், இது உடல் எடையை குறைக்க உதவும்.

உயர் ரத்த அழுத்தம்

வாழைத்தண்டில் வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் உள்ளது . வைட்டமின் பி 6 ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் , அதே சமயம் அதில் உள்ள பொட்டாசியம் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தததை குறைத்து கட்டுக்குள் வைக்கும். 

அமிலத்தன்மை

பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் சாப்பிடுவது, தூக்கமின்மை, இரவில் மிக தாமதமாக சாப்பிடுவது, போன்ற பல்வேறு காரணங்களால் அமிலத்தன்மை (Acidity) ஏற்படுகிறது. வாழைத்தண்டு சாறு  உடலில் உள்ள அமிலத்தின் அளவை கட்டுப்படுத்தி அமிலத்தன்மை , நெஞ்செரிச்சல் ஆகிவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. 

அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் அமிலத்தன்மை மற்றும் அதனால் ஏற்படும் நெஞ்செரிச்சல் நீங்கும் . எப்போதும் வெறும் வயிற்றில் குடிப்பது பயனளிக்கும்.

சர்க்கரை நோய்

வாழைத்தண்டு சாறு சர்க்கரை நோய்க்கு சிறந்தது, வாழைத்தண்டில் உள்ள நார்சத்து இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது வாழைத்தண்டு குறைந்த கிளைசெமிக்  இன்டெக்ஸ் (Low glycemic index) குறைவாக உள்ளதால் சர்க்கரை உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. 

ரத்த சோகை

வாழைத்தண்டில் ரத்ததில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் வைட்டமின் பி‌6 உள்ளது. .ரத்த சோகை உள்ளவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இரும்பு சத்து அதிகரிக்கும், இரத்த சோகை நீங்கும். 

சிறுநீர் பாதை தொற்று

வாழைத்தண்டு சாறு சிறுநீர் பாதையில் ஏற்படக்கூடிய சிறுநீர்வழி தொற்றுக்களை (Urinary tract infections) நீக்கி சிறுநீர் பாதையை சுத்தமாக்கும்..