மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் / health benefits of black pepper

https://tamilnewsdesk.blogspot.com/


மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் / health benefits of black pepper


மிளகு நம் தினசரி உணவில் பயன்படுத்தபடும் ஒரு மசாலா பொருள் ஆகும். ஒரு சிறு மணியளவு தோற்றம் கொண்ட மிளகு வெப்பம் மற்றும் காரமான சுவை கொண்டது. மிளகு எண்ணற்ற ஊட்டசத்துக்கள்  மற்றும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. 

ஆஸ்துமா , சளி, இருமல் போன்ற சுவாசப் பிரச்சினைகளுக்கு மிளகு ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும்.

அஜீரணம் மற்றும் வாய்வுக்கான ஒரு பாரம்பரிய மருந்தாக மிளகு  விளங்குகிறது. மிளகின் மருத்துவ குணங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்  பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.(milagu benefits in tamil).

கருப்பு மிளகு  பைபரேசி குடும்பத்தைச் சேர்ந்த கருப்பு மிளகு செடியின் பழமாகும், மேலும் இது ஒரு மசாலா மற்றும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு மிளகில் பைபரின் என்கிற வேதிப்பொருள்  இருப்பதால் மிளகு காரமான சுவை கொண்டரிக்கிறது. கருப்பு மிளகின் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம் .

மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்-சி , வைட்டமின் கே, மற்றும் நார்ச்சத்து ஆகியவை ஒரு சிறு மிளகில் அடங்கி உள்ளது. கருப்பு மிளகு மற்றொரு சிறந்த அழற்சி எதிர்ப்பு முகவர் ஆகும்.

 செரிமானம் சீராகும்

மிளகில் உள்ள பைபரின் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமில சுரப்பை அதிகரிப்பதின் மூலம் உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. 

சளி மற்றும் இருமல் 

சளி மற்றும் இருமல் டானிக்குகளில் மிளகு சேர்க்கப்படுகிறது. இது சுவாசக் குழாயில் உள்ள சளி மற்றும் கபத்தை உடைக்க உதவும். 

பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் இருப்பதால், சளி மற்றும் இருமலுக்கு கருப்பு மிளகு சிறந்த  இயற்கை தீர்வாகும். அதன்  காரமான சுவை கபத்தை தளர்த்தவும், குறைக்கவும் உதவுகிறது. சூடான சூப் அல்லது ரசத்தில் சிறிது மிளகு தூள் சேர்த்து பருகவும்.  

பசியைத் தூண்டுகிறது

கருப்பு மிளகு உணவிர்க்கு சுவை மற்றும் செரிமானத்தை ஊக்குவிப்பதைத் தவிர,  பசியை தூண்ட செயல்படுகிறது. 

கீல்வாதம்

கருப்பு மிளகு  வாத நோய் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சினை  உள்ளவர்களுக்கு மிளகு பயன் தரும். மிளகு உடலில் யூரிக் அமிலத்தை நீக்குவதின் மூலம் நாள்பட்ட வாத நோய் மற்றும் கீல்வாதம் ஆகியவற்றின் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

பல் ஆரோக்கியம்

கருப்பு மிளகு பல் சிதைவு மற்றும் துவாரங்களை எதிர்த்துப் போராடவும்  வலுவான பற்களை ஊக்குவிக்கவும் கருதப்படுகிறது. கருப்பு மிளகு பல் வலிகளை குணப்படுத்துவதோடு வலிகளையும் குறைக்கும்.  

கருப்பு மிளகு தரும் ஆரோக்கிய நன்மைகள்

இருமல் தொல்லைகளில் கருப்பு மிளகு சிறந்தது.  ஒரு தேக்கரண்டி இயற்கை தேனில் 1-2 சிட்டிகை கருப்பு மிளகு தூள் கலக்கவும். இருமலை போக்க  ஒரு நாளைக்கு 3-4 முறை சாப்பிடவும்.

அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து ஒரு தேக்கரண்டி வெல்லம் உட்கொள்வது பசியை அதிகரிப்பதுடன் செரிமான பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.

ஜலதோஷத்தின் முதல் கட்டத்தில், மூக்கிலிருந்து ஒழுகும் நீரை வெளியேற்றுவதன் மூலம், கருப்பு மிளகு  நிவாரணத்தை தருகிறது. அரை டீஸ்பூன் மிளகு தூளை ஒரு  கிளாஸ் பாலில் கொதிக்க வைத்து படுக்கை நேரத்தில் குடியுங்கள்.