வைட்டமின் டி சத்து உள்ள உணவுகள்

https://tamilnewsdesk.blogspot.com/


வைட்டமின் டி சத்து உள்ள உணவுகள்

இந்தியா சூரிய ஒளி அதிகமாக கிடைக்க கூடிய நாடாக இருந்தாலும் கூட வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையின் அளவு அதிகரித்து உள்ளது.

நவீன மயமாக்கப்பட்ட வாழ்க்கை முறைகள்வேலை காரணங்களால் பெரும்பாலான நேரங்களில் நாம் வெளியில் செல்வதில்லை, சூரிய ஒளி நம் மீது படக்கூடிய வாய்ப்பை நாமே குறைத்து கொள்கிறோம். இதனால் நம் உடலுக்கு சூரிய ஒளி மூலம் கிடைக்க வேண்டிய வைட்டமின் டி  நமக்கு கிடைக்காமல் போகிறது.

சூரிய ஒளி மற்றும் வைட்டமின் டி அதிகம் நிறைந்த உணவுகள் மூலம் நமக்கு தேவையான வைட்டமின் டி சத்துகளை எவ்வாறு பெறுவது என்பதை  தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்... vitamin d foods in tamil        

வைட்டமின் டி ஏன் முக்கியமானது

வைட்டமின் டி ரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை சரியான அளவில் வைத்திருக்கும். இவை இரண்டும் உங்கள் எலும்புகளை வலிமையாக்க ஒன்றிணைந்து செயல்படும் ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

வைட்டமின் டி கால்சியம்  மற்றும் பாஸ்பரசை குடலில் இருந்து உருஞ்சுகிறது. உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால், நாம் கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் கூட அவை உரிஞ்சபடாமல் இருக்கும்.    

உடலில் போதுமான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உரிஞ்சபடாவிட்டால் எலும்புகள் வலுவிழந்து விடும்.   

நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகளுக்கு வைட்டமின் டி உதவுகிறது.

வைட்டமின் டி ரத்த அழுத்தம்மற்றும் கொழுப்பை ஒழுங்குபடுத்துகிறது.  இதய பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. 

வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகள் 

குழந்தைகள்வயதானவர்கள்நாள் முழுவதும் அறையில் வேலை பார்ப்பவர்கள்சூரிய ஒளியில் செல்லாத வர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

ரிக்கட்ஸ்

வைட்டமின் டி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ரிக்கட்ஸ் ஏற்படலாம் , இதனால் அவர்களின் கால் மற்றும் கை எலும்புகள் மென்மையாகி வளைந்து காணப்படும். வெயில் காலங்களில் சிறிது நேரம் செலவிடுவது வைட்டமின் டி குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.

ஆஸ்டியோமலாசியா

வைட்டமின் டி சத்து உள்ள உணவுகள்

வைட்டமின் டி குறைபாடு காரணமாக  வயதானவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படலாம், ஆஸ்டியோபோரோசிஸ் என்பது  மென்மையான மெல்லிய உடையக்கூடிய எலும்புகளை ஏற்படுத்தும், இதனால் எளிதான எலும்பு முறிவு வாய்ப்புகள் ஏற்படலாம்.  

இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும்பாலும் படிக்கட்டுகளில் ஏறுவதோ அல்லது தரையிலிருந்து அல்லது சிறிய நாற்காலியில் இருந்து எழுவதற்கு கூட சிரமப்படுவார்கள்.     

ALSO READ:கால்சியம் உள்ள உணவுகள்                              

அறிகுறிகள்

வைட்டமின் டி சத்து உள்ள உணவுகள்

உடல் சோர்வுஉடல் வலி, நடக்கும் போது சிரமம், எலும்புகளில் மற்றும் மூட்டுகளில் வலி, தசை வலி, போன்ற அறிகுறிகள் வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படலாம். 

வைட்டமின் டி யை  அதிகரிப்பது எப்படி

சூரிய ஒளியில் நிற்பது மற்றும் வைட்டமின் சத்து உள்ள உணவுகள் சாப்பிடுவது மூலம் வைட்டமின் டி யை அதிகரிக்கலாம்.

பால்

வைட்டமின் டி சத்து உள்ள உணவுகள்

பாலில்  கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்து இருக்கின்றன, பால் உடலுக்கு தேவையான  ஊட்டசத்துக்களையும் கொண்டுள்ளது, தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பதால்  20% வைட்டமின் டி கிடைக்கும்.

ஆரஞ்சு சாறு

வைட்டமின் டி சத்து உள்ள உணவுகள்

வைட்டமின் டி உள்ள ஆரஞ்சு சாறை உங்கள் காலை உணவுக்கு பின் ஒரு கிளாஸ்  குடித்துவைட்டமின் டி உள்பட உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அதிலிருந்து பெறுங்கள்.

காளான்கள்

வைட்டமின் டி சத்து உள்ள உணவுகள்

இயற்கையாகவே வைட்டமின் டி கொண்ட தாவர உணவுகள் காளான்கள் மட்டுமே. சூரிய ஒளியில் வளர்க்கபடும் காளான்கள் வைட்டமின் டி நிறைந்தவை.  வைட்டமின் டி கொண்ட தாவர உணவுகளை தேடும் சைவம் உணவு உண்பவர்களுக்கு காளான் மிக சிறந்தது.

மீன்கள்

வைட்டமின் டி சத்து உள்ள உணவுகள்

சால்மன்  மீன்கள் கொழுப்பு  நிறைந்தவை, இதில் வைட்டமின் டி அதிகம் நிறைந்து உள்ளது. சால்மன் மீன்களில் உங்களுக்கு தினமும் தேவைப்படும் வைட்டமின் டி யில்  80% இதில் உள்ளது

முட்டை 

வைட்டமின் டி சத்து உள்ள உணவுகள்

முட்டையின் மஞ்சள் கரு வைட்டமின் டி  தினசரி மதிப்பில் 6% உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, ஈ, இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டசத்துக்களை கொண்டுள்ளது. 

ஒரு முட்டை சாப்பிடுவது வைட்டமின் டி  6% அளவை உங்களுக்கு வழங்கும் மற்ற முட்டைகளுடன் ஒப்பிடும்போது  நாட்டுக்கோழி முட்டைகளில் வைட்டமின் டி சற்று அதிகம் உள்ளது.

மீன் எண்ணெய்

வைட்டமின் டி சத்து உள்ள உணவுகள்

காட் லிவர் எண்ணெய்யில் வைட்டமின் டி நிறைந்து உள்ளது, ஒமேகா 3 கொழுப்பு  அமிலங்களும் நிறைந்து உள்ளன. இவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  அஸ்டியோபொரோசிஸ் ஏற்படாமல் தடுக்க உதவும். 

சூரிய ஒளி

வைட்டமின் டி சத்து உள்ள உணவுகள்

வைட்டமின் டி யை மிகவும் எளிதாக பெற சூரிய ஒளி ஒரு சிறந்த வழியாகும், சூரிய ஒளியின் புற ஊதா பி கதிர்கள் நம் உடல் மீது படுவது மூலம் நம் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும்.

சூரிய ஒளி கதிர்கள் மூலம் வைட்டமின் டி பெற சூரிய ஒளியில் (காலை 11 -2 மதியம் வரை) நேரத்தில் வாரத்தில் மூன்று நாள்கள் சுமார் 20 நிமிடங்கள் சூரிய ஒளி நம் மீது படும் படி இருந்தாலே போதும். உங்களுக்கு தேவையான வைட்டமின் டி கிடைத்து விடும்.  

வைட்டமின் டி சப்பிளிமெண்ட்ஸ்

மருத்துவரின் ஆலோசனை இன்றி வைட்டமின் டி சப்ளிமென்ட் எடுக்க கூடாது. சூரிய ஒளியில் நிற்க முடியாதவர்கள், வெளியில் செல்ல முடியாத மருத்துவ நிலை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று வைட்டமின் டி சப்ளிமென்ட் எடுத்து கொள்ளலாம்.



 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.