வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

https://tamilnewsdesk.blogspot.com/


வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


வெந்தயம் என்பது சுவை மற்றும் ஆரோக்கியத்திற்காக பெரும்பாலான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். 

வெந்தய விதைகளில் நல்ல அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது.  ஃபோலிக் அமிலம், தியாமின், நியாசின், வைட்டமின் கே, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி 6 போன்ற  வைட்டமின்கள் இதில் காணப்படுகின்றன. ஜிங்க், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற  தாதுக்களும் இதில் நிறைந்துள்ளது.

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு, தாய்ப்பால் சுரக்க வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் வெந்தயத்தின் நன்மைகள் பற்றி பார்ப்போம்..

 கொழுப்பு குறைய

வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வெந்தயம் விதைகளை உட்கொள்வது உடல் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.        வெந்தயத்தை இரவில்  தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் கொழுப்பு குறையும் .  

உடல் எடை குறைய வெந்தயம்

வெந்தயம் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பயன் தரும், எடையைக் குறைப்பது என்பது கலோரி அளவைக் குறைப்பதாகும்.

வெந்தயம் விதைகளில் உள்ள நீரில் கரையக்கூடிய  கலெக்டோமன்னன் என்னும் நார்சத்து சாப்பிட்ட முழுமையின் உணர்வை அதிகரிப்பதன் மூலம் உங்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது, பசியின்மை காரணமாக, நீங்கள் மீண்டும் உணவை சாப்பிட தோன்றாது, இதனால் உடல் எடையும் அதிகமாகாமல் கட்டுக்குள் இருக்கும்.   

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த  தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.

இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது

வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க  வெந்தயம் உதவுகின்றது. இரத்தக் கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதால் இதய நோய் பெரும்பாலும் ஏற்படுகிறது.வெந்தயம் விதைகளை சாப்பிட்டு வந்தால் இதய நோய் பிரச்சனைகளை  தடுக்க முடியும், வெந்தயம் கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் அளவை இயல்பாக்குவதற்கு உதவுகின்றது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது


வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வெந்தயம்  நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது, ஏனெனில் இதில் செரிமானத்தை மெதுவாக்கும்  நார்ச்சத்து கொண்டிருக்கும் ரசாயனங்கள் உள்ளது.

10 கிராம் வெந்தயம் விதைகளை சூடான நீரில் ஊறவைத்து சாப்பிடுவது டைப் -2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.  

நெஞ்செரிச்சல்

வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையிலிருந்து விடுபட வெந்தயம் சிறந்த ஒன்றாகும்.  

அமிலத்தன்மை நீங்க தினமும் ஒரு டீஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுங்கள்.

குறிப்பு.

வெந்தயத்தின் பயன்கள் குறித்து பல்வேறு சான்றுகள் உள்ளது. அதனால் அதை உட்கொள்வதற்கு நீங்கள் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை, ஏனெனில் இது உங்களுக்கு அதிக நன்மைகளையே தரும்.