நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

https://tamilnewsdesk.blogspot.com/
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அளவற்ற நன்மைகள்

நெல்லிக்காயின் தன்மையே  நோய் எதிர்ப்பு சக்தி பண்புகள் அதில் அடங்கி உள்ளது தான். அதனால் தான் நெல்லிக்காயை லேகியம் , சூரணம் போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நெல்லிக்காய் உதவுகிறது. 

நெல்லிக்காய் உடலுக்கு பல வகைகளில் பயன்களை கொடுக்கக் கூடியது. அந்த  அளவிற்கு அதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாகப்  பார்ப்போம். 

சத்துக்கள்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அளவற்ற நன்மைகள்

நெல்லிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, மெக்னீசியம் , கால்சியம் பாஸ்பரஸ் வைட்டமின் பி மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில்  600 மி.கி வைட்டமின் சி  கொண்டுள்ளது. வேறு எந்த காய்கறி அல்லது பழங்களில் கூட  இந்த அளவிற்கு வைட்டமின் சி கிடையாது. 

நோய் எதிர்ப்பு சக்தி

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அளவற்ற நன்மைகள்

நெல்லிக்காயில் நிறைந்துள்ள வைட்டமின் சி , உடலில் வெள்ளை இரத்த அணுக்கள் (WBC) உற்பத்தியை அதிகரிக்கிறது

வெள்ளை இரத்த அணுக்கள் (WBC) உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் எதிர்த்துப் போராடி தடுக்க கூடியது.

தினமும்  ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 கொழுப்பு

நெல்லிக்காயில் உள்ள குரோமியம் உடலில் தங்கியிருக்கும்  LDL கொலஸ்டிரால் என்னும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. 

தினமும் ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் உடல் கொழுப்பு குறையும்.

இதயம்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அளவற்ற நன்மைகள்

நெல்லிக்காயில்  உள்ள வைட்டமின் சி மற்றும் குரோமியம்   இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குவதால் இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு நீங்கி இருதயதிற்கு செல்லும்  ரத்த ஓட்டம்  எளிதாகுகிறது.

இதனால் இருதய பாதிப்பு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது .

அரை கப் நெல்லிக்காய் சாறு எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும்.

இரத்த அழுத்தம்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அளவற்ற நன்மைகள்

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த 

நெல்லிக்காய் இரத்த அழுத்தத்திற்கு ஒரு சிறந்த மருந்து.  நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, இரத்ததில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. மற்றும் ரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. 

அரை டீஸ்பூன் நெல்லிக்காய்  பொடியை  தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

ஒரு டீஸ்பூன்  தேனுடன் சேர்த்தும் குடிக்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அளவற்ற நன்மைகள்

நீரிழிவு நோயாளிகளின்  இரத்த குளுகோஸ் அளவை குறைக்கிறது. 

நெல்லிக்காய் சாறு  உட்கொள்வது உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தூண்டுவதால் அதிக இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது அல்லது நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து குடிப்பது உங்கள் சர்க்கரை அளவை குறைத்து கட்டுக்குள் வைக்க உதவும்.

இருமல் மற்றும் சளி

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அளவற்ற நன்மைகள்

நெல்லிக்காய் பாக்டீரியா, வைரஸ் தொற்று மற்றும் ஜலதோஷம் போன்றவற்றிலும் உங்கள் உடலுக்கு பயனளிக்கும்.

நெல்லிக்காய் தூளை 2 தேக்கரண்டி தேனுடன் கலக்கவும்.  இது ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை எடுத்துக் கொள்ளும்போது சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

கண்பார்வை

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அளவற்ற நன்மைகள்

நெல்லிக்காயில் உள்ள கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ கண்பார்வை மற்றும் முடி வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

ஹீமோகுளோபின்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் அளவற்ற நன்மைகள்

ஒரு டீஸ்பூன் வெல்லம் தூள் கொண்ட ஒரு கிளாஸ் நெல்லிக்காய் சாறு உங்கள் உடலுக்கு இரும்பு அளவை அதிகம் கொடுக்க உதவுகிறது, இது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது மற்றும் இரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்க உதவுகிறது.

குறிப்புகள்

அம்லா அதிக குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால்  அதை தேனுடன் பயன்படுத்துவதால் அதை சமன் செய்யும் என்று கூறப்படுகிறது.

தேன் என்பது உடலை சூடாக்கும் பண்புகளைக் கொண்டது. இயற்கையான இனிப்பானது மற்றும் உடலில் இருந்து கபம் மற்றும் நச்சுகளை வெளியேற்றும் என்று கூறப்படுகிறது.

நெல்லிக்காய்  ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பச்சையாக சாப்பிடலாம். பிரச்சினை இல்லை. நெல்லிக்காய் சாறு  அதிக அளவில் எடுத்து கொள்ள கூடாது. மற்றும் இரவு நேரங்களில் நெல்லிக்காய் சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஏற்கனவே இருதய பிரச்சினை உள்ளவர்கள் , இந்த பிரச்சனைக்கு மருந்து எடுத்து கொள்பவர்கள் நெல்லிக்காய் ஜுஸ் எடுத்து கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.