வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

https://tamilnewsdesk.blogspot.com/

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


வாழை இலை பயன்கள்

தென்னிந்தியாவில்  வாழை இலையில் பரிமாறப்படும் உணவுகளை சாப்பிட மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். 

திருமணங்கள், விழாக்கள் , பண்டிகைகளின் போது வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. முற்றத்தில் வாழை மரத்தை நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் போன்ற தென்னிந்தியக் கொண்டாட்டங்களில் வாழை இலையில் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுகிறது.

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் வாழை இலையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் 

வாழை இலைகளில் எபிகல்லோகேடசின் கேலேட்  (EGCG)   ,என்கிற பாலிஃபீனால்கள் (Polyphenol) உள்ளன, இவை க்ரீன் டீயிலும் உள்ளது. இது  உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும்உணவை சுவையாகவும்,  ஊட்டச்சத்து நிறைந்தாகவும்  வைத்திருக்க உதவகிறது..

வாழை இலையில்  உணவை பரிமாறும்போது இலையில் உள்ள இந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்  உணவில் கலந்து உடலுக்கு அந்த ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் 

வாழை இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறதுஇது கிருமிகள் அல்லது பாக்டீரியாக்களால் உணவைப் பாழாக்காமல் பாதுகாக்கவும். உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

உணவின் நறுமணம் மற்றும் சுவை

வாழை இலைகள் சில உணவுகளை சமைக்கவும் பயன்படுகிறது. வாழை இலைகளை பயன்படுத்தி ஆவியில் வேகவைக்கப்படும் உணவுகள்  அருமையான சுவை மற்றும்  இனிமையான நறுமணத்தை கொடுக்கிறது. . 

 மேலும் வாழை இலையில் உள்ள மெழுகு அடுக்குகள் ஒரு  தனித்துவமான நறுமணத்தை கொண்டுள்ளது. வாழையிலையில் சூடான உணவை பரிமாறும்போது இலைகளில் உள்ள மெழுகு உருகி உங்கள் உணவின் சுவையை  மேலும் கூட்டுகிறது .

 சுகாதாரமானது

வாழை இலையில் சாப்பிடுவது மிகவும் சுகாதாரமான வழியாகும்.  வாழை இலைகள் சுத்தமானவை, அவை நம் உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை.வாழை இலைகளில் உள்ள மெழுகு பூச்சு காரணமாக அதில் தூசி மற்றும் அழுக்குகள் எளிதில் படிவதில்லை, அதனால் அவற்றை நாம் அதிகம் சுத்தம் செய்யத் தேவையில்லை சாப்பிடுவதற்கு முன் ஒரு முறை தண்ணீரில் கழுவினாலே போதுமானது.

சுற்றுச்சூழலுக்கு உகந்தவை

வாழை இலைகள் இயற்கையாகவே பெறப்படுகின்றன, விசேஷ  நிகழ்வுகள் அல்லது திருமணங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் உணவு பரிமாற, பெரும்பாலும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தட்டுகளை  பயன்படுத்துகின்றனர்.  இந்த தட்டுகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். சுற்றுச்சூழலை பாதிப்பில் இருந்து பாதுகாக்க இந்த தட்டுகளுக்கு பதிலாக வாழை இலைகளை பயன்படுத்தலாம். ஏனெனில் வாழை இலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. வாழை இலைகள் காகிதம் அல்லது பிளாஸ்டிக் தட்டுகளை விட விரைவாக சிதைந்து மக்கி விடும். இதனால் மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இப்படி வாழை இலையில் சாப்பிடுவது சுற்றுச்சூழலுக்கு நல்லது.