பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்

https://tamilnewsdesk.blogspot.com/


பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும்   பயன்கள் /  beetroot juice benefits in tamil

பீட்ரூட் ஒரு உணவாக மட்டுமே இல்லாமல் இரும்புச்சத்து நிறைந்து இருப்பதால் இரத்த சோகையை தடுக்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  

பீட்ரூட்டை உங்கள் உணவில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஜுஸ் செய்து குடிக்கலாம். பீட்ரூட் ஜுஸ் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் அதிகம். உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த பீட்ரூட் ஜுஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்... 

சத்துக்கள்

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும்   பயன்கள் /  beetroot juice benefits in tamil

பீட்ரூட்டில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி வைட்டமின் பி 6, மாவுச்சத்து, உணவு நார்சத்துக்கள் உள்ளடக்கியுள்ளது. மேலும் ஃபோலிக் அமிலம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.

உயர் இரத்த அழுத்தம்

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும்   பயன்கள் /  beetroot juice benefits in tamil

பீட்ரூட்களில் நைட்ரேட்டுகள் எனப்படும்  இயற்கை ரசாயனங்கள் நிறைந்துள்ளது, இவை ஒரு சங்கிலி எதிர்வினை மூலம் உங்கள் உடலில் நைட்ரேட்டுகளை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுகிறது. இது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 

இரத்த சோகை  

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும்   பயன்கள் /  beetroot juice benefits in tamil

இரும்புச்சத்து குறைவு உள்ளவர்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உணவில் பீட்ரூட்டை சேர்க்க வேண்டும், பீட்ரூட்டில் இரும்பு சத்துகள் மட்டுமில்லாமல் பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் மற்றும் நார்சத்து உள்ளது, ஆரோக்கியமான இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பீட்ரூட் சாறு உதவும்.

கெட்ட கொழுப்பை தடுக்கிறது

பீட்ரூட்டில் ஃபிளாவனாய்டுகள், டயட்டரி ஃபைபர் மற்றும் பெட்டாசியானின் ஆகியவை உள்ளது, இவை (LDL) என்னும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது, தமனிகளில் அவை படியாமால் தடுக்கிறது. இது உங்கள் இதயத்தை பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதனால்தான் உங்கள் ரத்தத்தில் கெட்ட கொழுப்பை தடுக்க பீட்ரூட்டை தினசரி உங்கள் உணவில் சேர்க்க பரிந்துரைக்கின்றனர்.

உடல் எடை

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும்   பயன்கள் /  beetroot juice benefits in tamil

உங்கள் எடையை குறைக்க அல்லது பராமரிக்க  பீட்ரூட் ஒரு சிறந்த உணவு. பீட்ரூட்களில் குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டுள்ளது. இதேபோல் நீர் பராமரிப்பைக் குறைக்கவும், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது, இந்த செயல்பாடு உங்கள் எடை குறைப்புக்கு உதவுகிறது.

ஆற்றல் மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும்   பயன்கள் /  beetroot juice benefits in tamil

பீட்ரூட் சாறு மிகவும் பயனுள்ள முன்-வொர்க்அவுட் பானங்களில் ஒன்றாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் இது உடற்பயிற்சி செய்பவர்களின்  ஆற்றல் திறனை அதிகரிக்கிறது. உடற்பயிற்சிக்கு முன் ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறு குடித்தவர்கள், உடற்பயிற்சி செய்யும் நேரத்தை விட 16 சதவீதம் அதிகமாக உடற்பயிற்சி செய்ய முடிவதாக  கண்டறிந்தனர். இதனால் தான் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பீட்ரூட் சாற்றை குடிக்க  அறிவுறுத்தப்படுகிறார்கள், இது அவர்களின் தசைகள், ஆக்ஸிஜனை மிகவும் திறம்பட அனுமதிக்கிறது.

கல்லீரல் 

பீட்ரூட் சாறு கல்லீரல் மற்றும் வயிறு ஆகிய இரண்டையும் சுத்தப்படுத்தி அதில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது. பீட்ரூட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில் ஏற்கனவே உள்ள நச்சுக்களை குறைக்கிறது, அவை மேலும் குவிவதைத் தடுக்கிறது. இது கொழுப்பு அமிலங்களை உருவாகுவதைத் தடுக்கிறது. வயிற்றின் அமிலங்களை ஒழுங்குபடுத்துகிறது, செரிமானத்தை சீராக்குகிறது.

ஒளிரும் சருமம்

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும்   பயன்கள் /  beetroot juice benefits in tamil

உடல் ஆரோக்கியமாக இருந்தால், அது சருமத்தில் பிரதிபலிக்கும், பீட்ரூட்களில் நிரம்பியிருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி போன்ற வைட்டமின்கள்  வயதான அறிகுறிகளை குறைத்து, சருமத்திற்கு பொலிவை தருகிறது. பீட்ரூட் சாறு ஒரு இயற்கையான இரத்த சுத்திகரிப்பாளர்களாகவும் செயல்படுகின்றது, முகப்பருவை தடுக்கிறது. உங்கள் சருமம் பொலிவாக நன்மைகள் நிறைந்த பீட்ரூட் சாறு குடிப்பது நல்லது. 

பீட்ரூட் சாற்றை யார் குடிக்க கூடாது?

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்,  சிறுநீரக கற்களைக் கொண்டவர்கள் பீட்ரூட் ஜூஸை குடிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.     

பீட்ரூட் ஜுஸ் செய்வது எப்படி

சிறிய பீட்ரூட் இரண்டு எடுத்து கொள்ளுங்கள்  (அல்லது) பெரிய பீட்ரூட்டை பாதி எடுத்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து  பின்னர் வடிகட்டி குடிக்கலாம். 

எலுமிச்சை சாறில் வைட்டமின் சி உள்ளதால் பீட்ரூட்டில் உள்ள இரும்பு சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவும்.

பீட்ரூட் ஜூஸ் இனிப்பாக இருக்கும் அதனால் அதனுடன் சர்க்கரை சேர்க்க தேவையில்லை பீட்ரூட் ஜூஸ் குடிக்கும் பொழுது சிறிது பச்சை வாடை இருக்கும். அதனால் பிரச்சனை இல்லை.

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதற்கு நேரம் எதுவும் கிடையாது காலை உணவிற்கு பின் குடிக்கலாம் . 

குறிப்புகள்

பீட்ரூட் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம், இதில் பெரிதாக பக்க விளைவுகள் இல்லை என்றாலும் கீழ்கண்ட மாற்றங்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் தோன்றலாம். 

பீட்ரூட் சாறு குடிப்பதால் சிறுநீர் நிறம் மாறலாம் ஆனால் இது தற்காலிகமானது  நீங்கள் பீட்ரூட் சாறு குடிப்பதை நிறுத்திய பின் பழைய நிறத்திற்க்கு மாறி விடும்.

பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பீட்ரூட் அதிக அளவு இயற்கை சர்க்கரையையும் வழங்குகிறது என்பதால் நீரிழிவு பிரச்சினைகளுடன் உள்ள அனைவருக்கும் பீட்ரூட் ஜுஸ் பரிந்துரைக்கப்படவில்லை.

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜுஸ் குடிப்பதை தவிர்த்து விடுங்கள். காரணம் பீட்ரூட் ஜுஸ் குடிப்பது இரத்த அழுத்தத்தை மேலும் குறைத்து விடும். 

தினமும் 250 மில்லி அல்லது ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜுஸ் குடிப்பது நல்லது.

நீங்கள் எதாவது நோய்களுக்கு மருந்துகள் எடுத்து கொண்டிருந்தால் மருத்துவர் ஆலோசனை பெற்று பீட்ரூட் ஜுஸ் குடிக்கலாம்.


beetroot juice benefits.