மஞ்சள் பாலின் மருத்துவ குணங்கள்

https://tamilnewsdesk.blogspot.com/

மஞ்சள் பாலின் மருத்துவ குணங்கள்

மஞ்சள் பால் நன்மைகள்: மஞ்சள் பால் மிகவும் பிரபலமான வீட்டு வைத்தியமாக பயன்படுத்தபட்டு வருகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் பால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் நல்ல தூக்கத்தை ஊக்குவிப்பது மற்றும்  அழகை மேம்படுத்துவது வரை  நமது ஆரோக்கிய வாழ்க்கைக்கு பல வழிகளில் பயனளிக்கும், உடலுக்கு  அரோக்கியத்தையும் கொடுக்கும் மஞ்சள் பால் நன்மைகள் பற்றி  தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

மஞ்சள் பால் என்றால் என்ன?

மஞ்சள் பால் என்பது ஒரு கிளாஸ் சூடான பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகும்  பானமாகும். இதில் இஞ்சி, ஏலக்காய், மிளகு தூள், தேன் அல்லது பனைவெல்லம் ஆகியவை பாலின் சுவையை மேம்படுத்தவும், கூடுதல் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் சேர்க்கப்படுகிறது. 

 மஞ்சள் பாலின் நன்மைகள்

மஞ்சள் பால் அடிப்படையில் நோய்களை எதிர்த்துப் போராடவும் வைரஸ்களைத் தடுக்கவும் உதவுகிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இரத்தத்தை சுத்திகரித்து  நச்சுகளை வெளியேற்றுறது. மஞ்சள் பாலின் மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை இப்போது பார்ப்போம்...

சுவாசப் பிரச்சனைகள் 

மஞ்சள் பாலின் மருத்துவ குணங்கள்

மஞ்சள் பால் சுவாச பிரச்சனைகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. மஞ்சள் பால் குளிர், ஜலதோஷம் ,மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக செயல்படுகிறது. மஞ்சளில்  உள்ள குர்குமின் நுரையீரலை வலுப்படுத்தும் என்றும் புகைபிடித்தல் அல்லது சுற்றுச்சூழல் காரணிகளால்  நுண்குழாய்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் என்று ஒரு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இஞ்சி, ஏலக்காய், மிளகு போன்ற இதில்  சேர்க்கப்படும் பொருட்களும் இந்த கோளாறுகளின் அறிகுறிகளைக் குறைத்து  சுவாசிப்பதை எளிதாக்குகிறது. 

குளிர் மற்றும் இருமலுக்கு தீர்வு

மஞ்சள் பாலின் மருத்துவ குணங்கள்

மஞ்சள் பாலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளது.  இது சளி மற்றும் இருமலுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது, தொண்டை புண்ணையும் ஆற்றுகிறது. இளஞ்சூட்டில் மஞ்சள் பாலைக் குடிப்பது சளி மற்றும் சுவாசக் குழாயில் உள்ள நுண்ணுயிரிகளை வெளியேற்ற உதவுகிறது. சளி பிரச்சினை உள்ளவர்கள்  சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் அதனுடன் சிறதளவு மிளகு தூள் கலந்து குடித்து வந்தால் சளி மற்றும் இருமல் குணமாகும்.

ALSO READ : கால்சியம் சத்து அதிகம் நிறைந்த உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

மஞ்சள் பாலில் உள்ள குர்குமின்  நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சளில் உள்ளிருக்கும் குர்குமின்  நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடும். சூடான மஞ்சள் பால் குடிப்பது ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரலில் உள்ள கபம் மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கும். 

செரிமானத்தை மேம்படுத்துகிறது

மஞ்சள் பாலின் மருத்துவ குணங்கள்

மஞ்சள் பாலில் சேர்க்கப்படும், ஏலக்காய், மிளகு, ஆகியவை செரிமானத்தை எளிதாக்குகிறது. உடலில் பித்த உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம்  செரிமான கோளாறுகளை நீக்குகிறது. மஞ்சள் பாலில் சேர்க்கப்படும் இஞ்சி மற்றும் பிற பொருட்கள் உடலில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி குடல் இயக்கத்தைத் தூண்டுகிறது. மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் செரிமான அமைப்பை சீராக வைக்கும். 

இரத்தத்தை சுத்திகரிக்கிறது

இரவில் ஒரு கிளாஸ் சூடான பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது.

மூட்டு வலி குறையும்

மஞ்சள் பாலின் மருத்துவ குணங்கள்

மஞ்சளில் உள்ள குர்குமின் வீக்கம் மற்றும் மூட்டு வலியையும் எதிர்த்துப் போராட உதவுகிறது. கீல்வாதம் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஞ்சள் பால் குடிப்பது பயன் தரும். பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது. எனவே மஞ்சள் பால் எலும்பு வலியைக் குறைப்பதில் மட்டுமல்லாமல் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

ALSO READ : மூட்டு வலி நீங்க வீட்டு  வைத்தியம்

நரம்பு மண்டலம்

மஞ்சள் பாலில் சேர்க்கப்படும் ஏலக்காய், மஞ்சள் ஆகியவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி தூக்கமின்மை மற்றும் பதட்டத்தை குறைக்கின்றது. 

நன்றாக தூங்க உதவுகிறது

மஞ்சள் பாலின் மருத்துவ குணங்கள்

படுக்கை நேரத்தில் மஞ்சள் பால் குடிப்பது  தூக்கமின்மையால் போராடுபவர்களுக்கு நன்மை கிடைக்கும். தூக்கத்தைத் தூண்டும் அமினோ அமிலமான டிரிப்டோபான் பாலில் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின்  மன அழுத்தத்தை குறைத்து  இரவு தூக்கத்தை எளிதாக்குகிறது. நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு ஒரு கிளாஸ் சூடான மஞ்சள் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு ஏலக்காய் தூள் கலந்து குடித்தால் தூக்கம் உங்கள் கண்களை தழுவும். 

மாதவிடாய் பிடிப்பை நீக்குகிறது

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் பிடிப்பை அனுபவிக்கும் பெண்களுக்கு, மஞ்சள் பால் பயனளிக்கும், மஞ்சள் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளை கொண்டுள்ளதால் இது மாதவிடாய்   வலியையும் தீவிரத்தையும் குறைக்க உதவுகிறது.  மாதவிடாய் தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு  மஞ்சள் பாலை குடிக்கத் தொடங்க பரிந்துரைக்கப்படுகிறது.

புற்றுநோயைத் தடுக்கிறது

மஞ்சளில் உள்ள குர்குமின் கலவை புற்றுநோய் செல்களைக் கொல்வதன் மூலம் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது மேலும் பரவுவதற்கும், டி.என்.ஏவை சேதப்படுத்துவதற்கும் உயிரணுக்களின் திறனைக் கட்டுப்படுத்துகிறது. புற்றுநோய் அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தால் மஞ்சள் பால் தினமும் உட்கொள்வது புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை நிறுத்த உதவும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மஞ்சள் பால் செய்வது எப்படி

ஒரு கப் பால் எடுத்து ஒரு கொதிக்க  வைக்கவும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்க்கவும். நீங்கள் தூங்குவதற்கு சற்று முன்பு அதை சூடாகவோ குடிக்கவும். மஞ்சள் பாலில்  ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் சேர்ப்பது  தொண்டை புண் மற்றும் தொற்றுநோய்களை தடுக்க உதவும்.

மஞ்சள் பால் எப்போது குடிக்க வேண்டும்

மஞ்சள் பாலை இரவு தூங்க செல்லும் முன் குடிப்பது சிறந்தது. இரவு உணவுக்குப் பிறகு 1 ½ முதல் 2 மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும். மஞ்சள் பாலை இரவு 10 மணிக்கு அல்லது அதற்கு முன்னதாக குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் குடிக்கலாம்.